Thursday, June 26, 2008

கருப்பு

பிடித்த நிறம்
என்பதாலோ என்னவோ
வாழ்க்கை இருண்டே கிடக்கிறது.

Monday, April 28, 2008

புரியாத விளக்கங்கள்..

எப்படியும் 
ஏதோ எழுத வேண்டுமென்று 
எழுதியதை 
எப்போது எப்படி எழுதினாய் 
என்று கேட்டால் எப்படிச் சொல்வது?

Monday, April 21, 2008

படித்ததில் பிடித்தது..

சிறகிலிருந்து
பிரிந்த இறகு
காற்றின் தீராதப் பக்கங்களில்
பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது..
- கவிஞர் பிரமிள்

Sunday, April 20, 2008

கேள்வியும் பதிலும்..


தவறான பதில்களே

கிடைப்பதறிந்தும்

கேட்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன

தவறான கேள்விகள்.

Monday, April 7, 2008

முடிக்காத கவிதை

முடிக்க முடியாக்
கவிதையொன்று
விழுங்க முடியா
மிடறு போல்
முன் தொண்டையில் தவிக்கிறது.
தேடும் வார்த்தைகளோ
தனிமைப்படுத்துகின்றன...
பெருங்கூட்டத்தின் நடுவேயும்.

Wednesday, April 2, 2008

சூரியனாய்..



கலைந்த கனவொன்றைத் தேடி
காற்றில் கரைகிறேன்.
காற்றோ
சிறு ஒளிக்கீற்றாக்கி
என்னை
உனது அறையில்
கசிய விடுகிறது.
நானும் சிறு நிலவாகி
உன்னை வெளிச்சமாக்குகிறேன்.
நீயோ பிரதிபலித்து
என்னை சூரியனாக்குகிறாய்
..

Tuesday, April 1, 2008

உன்னைத் தேடி...


வண்ணத்துப்பூச்சிகளிடம்
வழி கேட்கிறேன்
வீசும் காற்றில்

வாசம் பார்க்கிறேன்
நிலவிடம்
நிலவரம் அறிகிறேன்

நீ இல்லாத நாட்களில்
வேறென்ன செய்ய
உன்னை தேடுவதன்றி..

Monday, March 31, 2008

தூரிகை உன் கைகள்


நிலா பிடிக்கும்

உன் கைகள்

காற்றில்

வானவில் வரைகின்றன.


Thursday, March 27, 2008

பொதுவாக

முதுமை


ஆழ்ந்த நித்திரையென்றாலும்

பயமாகவே இருக்கிறது..

லஞ்சம்

முடியாதது என்று

எதுவுமே இல்லை.


சம்பளம்

பிடிக்கா விட்டாலும்

பிடித்தத்துடனே

ஒவ்வொரு மாதமும்.


Thursday, March 20, 2008

நீ நான் நாம்


பெருந்திரளான வார்த்தைகளின் நடுவே
கோர்க்க முடியாக்
கவிதையாய்
நீயும் நம் காதலும்.....