நீ அனுப்பிய
குறுஞ்செய்தியோன்று
அலைவரிசை தவறி
அடுத்த கிரகம்
சென்றுவிட்டதாம்.
கிரகவாசிகள்
எளிதாக
புரிந்துகொண்டனர்,
இது
அன்பின் மொழியென்று.
நம்மவர்கள்தான்
அதில் சாதிக் குறியீடுகள்
கண்டுள்ளதாகவும்,
பொருளாதார மதிப்பை
தரம் பார்த்ததாகவும்,
மதக் கோட்பாடுகளை
மதிப்பிட்டுள்ளதாகவும்
பிதற்றித் திரிகிறார்கள்.
அந்தக் குறுஞ்செய்தி
அந்தக் கிரகத்திலாவது
அதன் மதிப்போடு
வாழ்ந்துகொள்ளட்டும்.