வருடம் ஒரு முறைக்கான புது சட்டை, அண்ணனுடன் பங்கு பிரிக்கப் படும் பட்டாசு, வீட்டு முன் குவியும் பட்டாசுக் குப்பையின் பெருமிதம், ஆசிர்வாதம் அளிக்கும் பத்து ருபாய் நோட்டுக்கள், இன்னுமிருக்கிறதா அப்படியொரு தீபாவளி?
ஆங்கிலம் இந்தி
என பிற மொழிகளை
என் மகளுக்கு
கற்பிக்கச் சொல்லி
அடம் பிடிக்கிறாள்
என் மனைவி.
மொழிகளை படிப்பதைக்
காட்டிலும்
மனங்களை படிப்பதே
அவசியம் என
எப்படி சொல்வது அவளிடம்?