கனவுகள் எப்போதுமே நமக்கு பிடித்தமானவையாக இருக்கின்றன , நாம்
முழுக்க , முழுக்க நாமாக இருப்பதாலேயே .
அவை தொடர்பற்ற காட்சிகளால் கோர்க்கப்பட்டுள்ளன.
நமது வெளிபடுத்தாத ஆசைகளையும் , உண்மை முகத்தையும் , ஆழ் மன
ஆதங்ககளையும் நமது அனுமதியின்றி திரையிடுகின்றன.
சில கனவுகள் முடிவும் , தொடக்கமும் கொண்ட திரைப்படம் போல
ஆச்சர்யமூட்டுகின்றன.
நாம் பிரிந்த , இழந்த மனிதர்களுடன் மிகச் சாதாரணமாக உரையாட வைக்கின்றன.
நாம் பார்த்தேயிராத , அனுபவம் கொள்ளாத நிகழ்வுகளும் , சம்பவங்களும் , இடங்களும்
சம்பந்தமற்ற மனிதர்களுடன் நிகழ்த்தப் படும் கனவுகள் அறிவியலுக்கு அப்பாற்ப்பட்டது .
சில நிகழ்வுகள் நாம் ஏற்கனவே கனவில் கண்டதாய் உணர்வது எவரொருவரும்
மறுக்க இயலாதது.
நம்மை மகிழ்விக்கும் கனவுகள் சட்டென கலைத்து விடும்பொழுது ,
அதிகமாய் கோபம் கொள்கிறோம்.மீண்டும் தொடர முயற்சி கொள்கிறோம்.
நம்மை வருத்தம் கொள்ள செய்யும் , நாம் தோல்வியுற்ற கனவுகள் வெறும்
கனவுகளே என்று உணரும்பொழுது அடையும் ஆனந்தம் அளவிலாதது.
-மதுசூதனன்