Saturday, July 20, 2024
முடியாதொரு சொப்பனம்
ஊதுவர்த்தியொன்று
உணரமுடியாதபடி அணைவதுபோல்,
மழை நின்றாலும்
மரம் துளிர்க்கும்
மழைத்துளிபோல்,
ஆதவன் மறைந்தத
அறிய முடியாதபடி
அந்தி இன்னும்
வெறித்துக் கிடப்பதுபோல்,
மரம் மயங்கும்பட
மலர் உதிர்த்துச் செல்லும்
தென்றலை போல்,
உன் பிரிவும்
இருந்து இருக்கலாம்,
மீள்ந்தும் முடிக்க
முடியாதொரு சொப்பனம் போல்.....
Friday, January 19, 2024
இராமன் இட்ட கோடுகள்
அணிலோன்று காட்டில்
பெருமை பேசித் திரிந்ததாம்
இராமன் இட்ட கோடுகள் தாங்கிய இனமென்று.
வரிக்குதிரைகளும்
வண்ணத்துப் பூச்சிகளும்
வரிசை கட்டி நின்றனவாம்
எங்கள் மீதும் வரிகள் உண்டென்று,
அணில் யோசித்து சொல்லியதாம்,
ஒத்துக்கொள்ள மாட்டார்கள்!
"பாவம் நீங்கள்
பாடப் புத்தகத்தில் இல்லையென்று!
கடவுள்
புதிய கோவிலுக்கு கடவுள் வர மறுக்கிறார்.
இது உங்கள் கோவில்
நீங்கள் வந்தே ஆக வேண்டுமென கட்டளை இடுகிறான் அரசன்.
நான் ஏற்கனவே இங்கேதான் இருந்தேன்.
நீதான் என்னை துரத்தினாய் என்கிறார் கடவுள்.
அது வேறொருவர்
என்கிறான் அரசன்.
அது உனது புரிதல்
என்கிறார் கடவுள்.
நான் எங்குமே அங்கே இல்லை.
நீயே நிறைந்து இருக்கிறாய்
வந்தாலும் என்னை வணங்க யாரும் வரப் போவதில்லை என்று சொல்லி மறைகிறார்!
Friday, January 5, 2024
Subscribe to:
Posts (Atom)