Sunday, February 16, 2025

முட்டாளின் உலகம்

முட்டாளாய் ஒருநாள் இருந்து பாருங்கள், சௌகரியங்கள் அதிகம், எதிர்பார்ப்புகள் குறைவு, நீங்கள் எண்ணம்போல்  தவறுகள் செய்யலாம், முட்டாள்களின் உலகம் முன்னேற்பாடுகளற்றது, நினைத்த படி வாழலாம், அறிவாளிகளை கொஞ்சம் அறுவருக்க கற்றுக்கொள்ள வேண்டும், மற்றப்படி முட்டாளாய் இருப்பது ஒன்றும்பெரும் கடினமில்லை...

வீடு

தெற்குத் தெருவழி அப்பா நடந்து சென்று பார்த்ததேயில்லை, சுற்றுப் பாதை என்றாலும், வடக்கு சென்ற ேவீடு வந்து சேருவார்! நோவு கண்ட நாட்களில்கூட மறுத்து விட்டார், அந்த தெருவிலிருக்கும் மருத்துவச்சியை பார்க்க, ஏலம் விட்ட வீட்ட ைகண்ணீருடன் கடந்துதான் கடைசிமுறை அந்த தெருவை...

ஊர்

எல்லா ஊர்களையும் கடந்து விடுகிறேன் பேருந்தின் வேகத்திலேயே பிறந்து வளர்ந்த ஊரைக் கடப்பதை தவிர்த்து 

இந்த நாளை

காத்திருப்புகளை  கடன் வாங்கிச் செல்கிறேன், ஏமாற்றங்களை எதிர்பார்ப்பின்றியே ஏற்றுக்கொள்கிறேன், துரோகங்ககள ைதுளி சங்கடமின்ற ிகடந்து செல்கிறேன், வாழ்வின் மீது நம்பிக்கையென்று  எல்லாம் ஒன்றும் இல்லை, இந்த நாளை கடந்து விடத்தான் காத்திருக்கிறேன்...

கடவுள்

கோவில் மதிற்சுவர்களில் எழுதி செல்கிறார்கள் விண்ணப்பங்களை, விருப்பச் சீட்டுகள் இடமில்லாமல் இறைந்து கிடக்கின்றன, வேண்டுதல்கள் மனனமாகி விட்டன, அர்ச்சனைகள் அசரரீகளாய் மோதி செல்கின்றன, கடவுள் கவனித்துக் கொண்டுதான்  இருக்கிறார் கவலையின்றி..

Saturday, July 20, 2024

காதல் சூரியன்

கூடாத கனவு

வாடகை வாழ்க்கை

கருணைக் காயங்கள்

திருவிழா காலம்

முடியாதொரு சொப்பனம்

ஊதுவர்த்தியொன்று உணரமுடியாதபடி அணைவதுபோல், மழை நின்றாலும் மரம் துளிர்க்கும் மழைத்துளிபோல், ஆதவன் மறைந்தத அறிய முடியாதபடி அந்தி இன்னும் வெறித்துக் கிடப்பதுபோல், மரம் மயங்கும்பட மலர் உதிர்த்துச் செல்லும் தென்றலை போல்,  உன் பிரிவும்  இருந்து இருக்கலாம், மீள்ந்தும் முடிக்க முடியாதொரு சொப்பனம் போல்.....

கண்ணாத்தா

பூக்குழி இறங்க சொல்கிறாய்! தீச்சட்டி எடுக்கச்சொல்கிறாய்! வேஷம் கட்டி ஆடவும்சொல்கிறாய்! நூறு முகமுடையாள்! ஆயிரம் கையுடையாள்! லட்சம் கண்ணுடையாள்! நீயும் கொஞ்சம் எங்களுக்காக நிலமிறங்கு, அநீதி கொளுத்து, வேஷம் களை, போதும் இந்த பாரபட்சம்!

பழக்கம்

கால்கள் பழையதெனினும் செருப்பு புதிதெனில், நடை பழக ஒரு நாளேனும் ஆகத்தான் செய்கிறது!

அதீத

அதீத காரம், அதீத இனிப்பு, அதீத கசப்பு, அதீத அன்பு, அதீத மகிழ்ச்சி , அதீத துயரம், அதீதங்களை அணுக மறுக்கிறது மனம். உப்பு சப்பில்லாதவாழ்க்கை ஒன்றும்அவ்வளவு பெரிய குற்றமில்லைதானோ.?..

Friday, January 19, 2024

இராமன் இட்ட கோடுகள்

 


அணிலோன்று காட்டில்
பெருமை பேசித் திரிந்ததாம்
இராமன் இட்ட கோடுகள் தாங்கிய இனமென்று.
வரிக்குதிரைகளும்
வண்ணத்துப் பூச்சிகளும்
வரிசை கட்டி நின்றனவாம்
எங்கள் மீதும் வரிகள் உண்டென்று,
அணில் யோசித்து சொல்லியதாம்,
ஒத்துக்கொள்ள மாட்டார்கள்!
"பாவம் நீங்கள்
பாடப் புத்தகத்தில் இல்லையென்று!

அன்பின் வாசனை!

 


ஊமை சிறுமியொருத்தி
கைகளால் சைகை
செய்து நலம் விசாரிக்க,
காற்றெங்கும்
அன்பின் வாசனை!

கடவுள்

 

புதிய கோவிலுக்கு கடவுள் வர மறுக்கிறார்.

இது உங்கள் கோவில்
நீங்கள் வந்தே ஆக வேண்டுமென கட்டளை இடுகிறான் அரசன்.

நான் ஏற்கனவே இங்கேதான் இருந்தேன்.
நீதான் என்னை துரத்தினாய் என்கிறார் கடவுள்.

அது வேறொருவர்
என்கிறான் அரசன்.

அது உனது புரிதல் 
என்கிறார் கடவுள்.

நான் எங்குமே அங்கே இல்லை.
நீயே நிறைந்து இருக்கிறாய் 
வந்தாலும் என்னை வணங்க யாரும் வரப் போவதில்லை என்று சொல்லி மறைகிறார்!

Hmm


எல்லா கேள்விகளுக்கும்
பதிலாய் hmm மட்டுமே
தருகிறாய்,
நிராகரிப்பின் முதல் சொல்தான்
Hmm என்று உனக்கும்
தெரியும் என்று நம்புகிறேன்!

 

Friday, January 5, 2024

பேரன்பை

 

சண்டையிட்டு பிரிந்த

ஒருவரை தேடிக்கொண்டு இருக்கிறேன்,

நட்பு பாராட்டி,

எனது பெருந்தன்மை காட்டவும், 

பேரன்பை சொல்லவும்,

தேடிப் பார்த்தால்

ஒருவரும் இல்லை,

அவசரமாய் சண்டையிட்டு பின் சேர்ந்துகொள்ள 

ஒருவர் தேவைப் படுகிறது!

தயவு செய்யுங்கள்!

தந்தை

 

தந்தை முகமொத்தவர்
கையேந்தும்போது
ஏனோ பிச்சையிட
மனம் ஒப்புவதேயில்லை!