Sunday, February 16, 2025
முட்டாளின் உலகம்
முட்டாளாய் ஒருநாள்
இருந்து பாருங்கள்,
சௌகரியங்கள் அதிகம்,
எதிர்பார்ப்புகள் குறைவு,
நீங்கள் எண்ணம்போல்
தவறுகள் செய்யலாம்,
முட்டாள்களின் உலகம்
முன்னேற்பாடுகளற்றது,
நினைத்த படி வாழலாம்,
அறிவாளிகளை கொஞ்சம்
அறுவருக்க
கற்றுக்கொள்ள வேண்டும்,
மற்றப்படி
முட்டாளாய் இருப்பது
ஒன்றும்பெரும் கடினமில்லை...
வீடு
தெற்குத் தெருவழி
அப்பா நடந்து சென்று
பார்த்ததேயில்லை,
சுற்றுப் பாதை
என்றாலும்,
வடக்கு சென்ற
ேவீடு வந்து சேருவார்!
நோவு கண்ட
நாட்களில்கூட மறுத்து விட்டார்,
அந்த தெருவிலிருக்கும்
மருத்துவச்சியை பார்க்க,
ஏலம் விட்ட வீட்ட
ைகண்ணீருடன்
கடந்துதான்
கடைசிமுறை அந்த தெருவை...
Subscribe to:
Posts (Atom)