Thursday, February 9, 2012

வார்த்தைகளற்ற வாஞ்சைகள்

இன்னும் அடைந்தே கிடக்கின்றன

அளப்பறியா அன்பும் பாசமும்.

உறுதிப்படுத்த உதாரணங்களே

இங்கே தேவைப்படுகின்றன.

வார்த்தைகளற்ற வாஞ்சைகளை

உணரும் மனங்கள்

மரித்து வருகின்றன

என்பதே உண்மை.

Friday, October 7, 2011

இந்தியா என்னும் மீடியா உலகம்

இந்தியா என்னும் மீடியா உலகம்

அன்னா ஹஜாரே அவர்களின் போராட்டமும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளையும் உற்றுப் பார்த்தால் மேற்கொண்ட தலைப்பின் விவரம் புரியும்.

அன்னா ஹஜாரே அவர்கள் முன்வைக்கும் லோக்பால் இதுவரை உள்ள சட்டங்களுக்கும் மேல் அதிகாரம் கொண்ட அமைப்பினை வலியுறுத்துகிறது.ஏதோ இப்போது உள்ள சட்டங்கள் சரியில்லை என்பது போன்ற மாயையை உருவாக்குகிறார்.ஊழலுக்கு எதிரான சட்டம் வன்ற ஒரு சொல்லை முன்வைத்து ஊடகங்களும் ,அன்னா அவர்களும் மக்களை வைத்து ஒரு கண்கட்டி வித்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .இருக்கும் சட்டங்களே போதுமானது என்பதும்,அவற்றை சரியாக வழிநடத்தி செல்லும் நேர்மையான அரசியல் மற்றும் மனிதர்கள் இல்லை என்னும் உண்மையை மக்கள் உணரா வண்ணம் திசைதிருப்பப்பட்டிருக்கிறார்கள்.



அன்னா முன்வைக்கும் லோக்பால் பற்றி எந்த ஒரு ஊடகமும் அதன் சாராம்சங்களை விளக்கியதாகவோ ,மக்கள் அறிய முற்பட்டதாகவோ உணர முடிய வில்லை.முழுக்க முழுக்க விளம்பரம் தேடும் ஆதாயத்திற்காக மக்களால் ,இன்னும் பிற பிரபலங்களால் நடத்தப்பட்ட ஆதரவு போராட்டங்கள் கேலிக்குரியவை.

அன்னா முன்வைக்கும் லோக்பால் அடித்தட்டு மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட ஊழல் பிரச்சனைகளுக்கு எந்த வித தீர்வையும் முன்வைப்பதாக தெரிய வில்லை.

மாறாக ஏற்கனவே பணம் கொழுத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் மென்மேலும் பணம் சேர்க்க வழி செய்கிறது.

கடைசியில் மத்திய அரசும் தலையாட்டி விட்டது லோக்பாலுக்கு.அதன்பின் நடக்க இருக்கும் கேளிகூத்துக்களை நினைத்தால் பெரிய அயர்ச்சி ஏற்படுகிறது. அப்போதும் எவரொருவரை விடவும் ஊடகங்களே மிகப்பெரும் நன்மை அடையப் போவதென்பதும்

நமது பொழுதுபோக்கிற்கு நல்ல காலம் என்பதும் உண்மை.



நமக்கெல்லாம் எப்போதும் ரஜினியை போல் சூப்பர் ஹீரோ தேவைப் படுகிறார்.நாம் எதுவும் செய்யாமல் எல்லாமும் சரியாக நேர்மையாக நடக்க வேண்டும்.

"திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் ,திருட்டை ஒழிக்க முடியாது"

நாம் எல்லோரும் இன்னும் திருடர்களே !

-மதுசூதனன்